தேங்காய் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கஜந்த கருணாதிலக தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கு வாராந்த செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பாக அமைச்சரவையில் விரிவாக ஆராயப்பட்டு அரசாங்கம் சில தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது என்று அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கஜந்த கருணாதிலக குறிப்பிட்டார்.
தற்போதைய சூழ்நிலையில் தேங்காயின் விலை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. அதனால் தேசிய தேங்காய் எண்ணெய் உற்பத்திக்காக தேங்காய்களின் கேள்வியினை குறைப்பதன் மூலம் தேசிய சந்தையில் தேங்காய் விலை அதிகரிப்பினை குறைத்து தேங்காய் பயிர்செய்கையாளர்களுக்கும், தேங்காய் பயிர்செய்கையுடன் இணைந்த உற்பத்தியாளர்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் தேசிய தேங்காய் விலையினை நிலையான மட்டத்தில் முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் குறுகிய கால உபாய வழிகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அதனடிப்படையில், நான்கு மாதங்களுக்கு தேவையான கனிய எண்ணெய் 40,000 மெட்ரிக் தொன்னினை மாத்திரம் இறக்குமதி செய்வதற்கு ஏதுவான் முறையில் கீழ்வரும் வகையில் விசேட பண்டங்களின் வரியினை திருத்தம் செய்வதற்கு பெருந்தோட்டத்துறை அமைச்சர் கௌரவ நவீன் திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தேங்காய் எண்ணெய் ஒரு கிலோகிராமுக்கான விசேட பண்டங்களின் வரியினை 150 ரூபாவிலிருந்து 130 ரூபா வரை குறைத்தல்
சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய் ஒரு கிலோகிராமுக்கான விசேட பண்டங்களின் வரியினை 130 ரூபாவிலிருந்து 110 ரூபா வரை குறைத்தல்;
• சுத்திகரிக்கப்பட்ட பாம் தேங்காய் எண்ணெய் ஒரு கிலோகிராமுக்கான விசேட பண்டங்களின் வரியினை 150 ரூபாவிலிருந்து 130 ரூபா வரை குறைத்தல் என்பன நடைபெறவுள்ளன
0 Comments