கொழும்பில் பிரபல மூன்று பாடசாலை மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவங்களில் 6 மாணவர்கள் காயமடைந்த நிலையில் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனந்தா மற்றும் நாலந்தா கல்லூரி மாணவர்களுக்கிடையே இன்று பிற்பகல் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 3 பேர் காயமடைந்துள்ளதுடன் டீ.எஸ்.சேனாநாயக்க கல்லூரிக்குள் மாணவர் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் 3 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சம்பவங்கள் தொடர்பாக 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
0 Comments