பிரிவினைகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளைக் கைவிட்டு தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எம்மோடு இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் அழைப்பு விடுத்தார்.
அரசியலமைப்பு தயாரிப்பு செயற்பாடுகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளில் பிரிக்க முடியாத ஐக்கிய நாட்டுக்குள் ஒரு அரசியல் தீர்வு என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய இரா. சம்பந்தன், பிரிவினைக்காகச் செயற்படாமல் எம்மோடு சேர்ந்து செயற்படுவது முக்கியமாகிறது என்றும் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கிழக்கில் களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற நிகழ்வில் மக்கள் மத்தியில் உரையாற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர் இந்த அழைப்பை விடுத்தார்.
0 Comments