Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை உள்வாங்கும் நேர்முகப் பரீட்சை

கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நேர்முகப் பரீட்சைகள் நாளை முதல் நடைபெறவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக கல்வியியல் கல்லூரி பிரதம ஆணையாளர் கே.எம்.எச்.பண்டரா தெரிவித்துள்ளார்.
பஸ்துன்ரட்ட மற்றும் மஹரகம ஆகிய பிரதேசங்களின் கல்லூரிகளை தவிர நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள கல்வியியல் கல்லூரிகளுக்கான நேர்முகப் பரீட்சைகள் நாளை முதல் நடைபெறவுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு கபொத உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவர்.
இதற்கமைய, கல்வியாண்டுக்கு நான்காயிரத்து 69 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments