தேசிய தேகாரோக்கிய வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையினால் நடாத்தப்பட்ட உடற்பயிற்சி மற்றும் வேகநடைப்போட்டி என்பன மட்டு மாநகர ஆணையாளர் வெ.தவராஜா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாநகர உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஆண்களுக்கான வேக நடைப்போட்டியில் திரு.என்.ரெட்ணராஜா அவர்களும் பெண்களுக்கான வேக நடைப் போட்டியில் செல்வி.எஸ்.சரோஜினி அவர்களும் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆணையாளர் திரு.வெ.தவராஜா அவர்களால் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது.
0 Comments