Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பரீட்சை கால அட்டவணைகள் வௌியாகின

கல்விப்பொதுத் தராதர (உயர் தர) பரீட்சைகள் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி தொடக்கம் செப்டெம்பர் 02 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
ஞாயிறு தினங்கள் மற்றும் அரச விடுமுறை தினங்கள் தவிர ஏனைய நாட்களில் வழமையான பரீட்சைகள் நடைபெறும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, செயன்முறை பரீட்சைகள் 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் நொவெம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும்.
பொது தொழினுட்ப பரீட்சை 2017 ஓக்டோபர் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
கல்விப்பொதுத் தராதர (சாதாரண தர) பரீட்சைகள் 2017 டிசம்பர் 12 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில், ஞாயிறு மற்றும் அரச விடுமுறை தினங்கள் தவிர்க்கப்படும்.
சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைகள் 2018 பெப்ரவரி 27 ஆம் திகதி தொடக்கம் மார்ச் 9 ஆம் திகதிவரை, ஞாயிறு மற்றும் அரச விடுமுறை தினங்கள் தவிர்த்து நடத்தப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments