Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பிரபல போதைப்பொருள் வர்த்தகர் ரொஷான் வெட்டிக் கொலை

மிகப் பெரியளவில் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தவர் எனக் கூறப்படும் வனாதே குடு ரொஷான் என்ற சாமர சந்தருவன் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
பொரள்ளை எம்.எச். மொஹமட் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கொல்லப்பட்ட நபர் இன்று காலை மைதானத்திற்கு சென்றுகொண்டிருந்த போது இனந்தெரியாத இரண்டு நபர்கள், அவரை வாளால் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் குறித்து பொரள்ளை பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
போதைபொருள் விற்பனை தொடர்பில் இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு இந்த கொலைக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments