Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பல்கலைக்கழக நுழைவிற்கான விண்ணப்பம்! இறுதி திகதி அறிவிப்பு!

2016-2017 -ம் கல்வியாண்டுகளுக்காக பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.
இதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
பல்கலைக்கழக நுழைவிற்கான விண்ணப்பங்கள் இணையத்தளத்தின் ஊடாகவே சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதுவரை 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருக்கிறார்கள்.
அதேநேரம், மேன் முறையீடுகளை சமர்ப்பிப்பதன் மூலம் மாணவர்களுக்கு உரிய தீர்வை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments