கல்லாறு விளையாட்டுக் கழகம் 49வது ஆண்டுநிறைவை நோக்கிய நகர்வில்; இவ்வாண்டிற்கான இரண்டாவது செயற்திட்டமாக பட்டிருப்பு கல்வி வலயத்தின் மண்முனை தென் எருவில் கோட்டமட்ட பாடசாலைகளுக்கிடையே (சுமார் 10 பாடசாலைகள்) நடாத்திய மென்பந்து கிரிக்கற் சுற்றுப் போட்டி அண்மையில் கழகத்தின் தலைவர் ஆர். சஞ்சீவதாஸ் தலைமையில் பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
அணிவீரர்களின் அறிமுகத்தைத் தொடர்ந்து இறுதிப்போட்டியில் பெரியகல்லாறு மத்திய கல்லூரி அணியினரும், களுதாவளை மகாவித்தியாலய அணியினரும் மோதினர். நாணயச் சுழற்றியில் வெற்றி பெற்ற களுதாவளை அணியினர் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தனர்.
சிறப்பாக விளையாடிய களுதாவளை அணியினர் பெரியகல்லாறு அணியினருக்கு 63 ஓட்ட இலக்கை நிர்ணயித்தனர். பேரியகல்லாறு அணியினர் ஆரம்பத்தில் தடுமாறிய நிலையில் காணப்பட்டனர். இறுதிக் கட்டத்தில் மிகவும் விறுவிறுப்பாக விளையாடிய போதும் அவர்கள் 62 ஒட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டனர். இதனால் ஒரு ஓட்டத்தால் பெரியகல்லாறு அணியினர் வெற்றிவாய்ப்பை இழந்தனர்.
அதிதிகளின் உரையை அடுத்து,
பரிசளிப்பு விழாவின் போது, ஆட்டநாயகன் விருதை பிரசன்னாவிற்கு (24 ஓட்டங்கள்) களுதாவளை மகாவித்தியால பிரதி அதிபர் எஸ்.செந்தில்குமாரும், தொடர் ஆட்டநாயகன் விருதை புவிராஜ்க்கு (40 ஓட்டங்கள், 5 விக்கற்) கல்லாறு மத்தியகல்லூரி பிரதி அதிபர் வே.மனோகரனும். இரண்டாம் இடத்தைப்பெற்ற கல்லாறு மத்தியகல்லூரிக்கான கிண்ணத்தை கழகத்தின் செயலாளர் சசியும். முதலாம் இடத்தைப் பெற்ற களுதாவளை அணிக்கான கிண்ணத்தை கழகத்தின் தலைவர் ஆர்.சஜீவதாஸ் ஆகியோர் வழங்கிவைத்தனர்.
0 Comments