பேருந்துகள் மற்றும் புகையிரதங்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் பெண்கள் எதிர்நோக்கும் துஷ்பிரயோகங்கள் மற்றும் பாலியல் சில்மிஷங்களை தடுப்பது தொடர்பாக விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
மார்ச் 8ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
பொலிஸ் திணைக்களம் ,மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு ஆகியன இணைந்து இது தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டமொன்றையும் முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments