நல்லாட்சி அரசாங்கம் எங்களுக்கு இன்று காலை நல்ல பதிலைதத்தராத விடத்து போரட்ட வடிவத்தை மாற்றி எமது உயிரை மாய்த்தேனும் இந்தநிலத்திற்கான போரட்டத்தை முன்னெடுப்போம் என எட்டாவது நாளாகவும் கவணயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு புலக்குடியிருப்பு மக்கள் தெரிவித்துள்ளனர.
முல்லைத்தீவு கேப்பாப்புலவு புலக்குடியிருப்புப்பகுதியில் தங்களது காணிகளை விடுவிக்கக்கோரி அந்தப்பகுதி மக்கள் மேற்கொண்கொண்டுள்ள கவனயீர்ப்புப் போராட்டம் நேற்றும் (07-02-2017) எடடாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கரைதுரைப்பற்று பிரதேச செயலர் பிரிவின் கீழ் சூரிபுரம் பகுதியில் 59 குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகள் புலக்;குடியிருப்புப்பகுதியில் 84 குடும்பங்களுக்குந்சொந்தமான காணிகளும் கேப்பாப்புலவு பகுதியில் 155 குடும்பங்களுக்குச்சொந்தமான காணிகள் என சுமார் 524 ஏக்கர் காணி கடந்த எட்டு வருடங்களாக விமானப்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுடன் இந்த மக்கள்கேப்பாப்புலவு சீனியாமோட்டைப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கின்ற கேப்பாப்புலவு மாதிரிக்கிராகமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த மக்கள் தங்களது காணிகளை விடுவிக்கக் கோரி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த நிலையில் புலக்குடியிருப்புப் பகுதியில் 84 குடும்பங்களது காணிகளை விடுவிப்பதாக கடந்த 31ம் திகதி தெரிவிக்கப்பட்டதையடுத்து அங்கு சென்ற மக்களுக்கான காணிகள் வழங்கப்படாத நிலையில் அந்தக்காணிகளுக்கான அந்த மக்கள் போராட்டத்தை ஆரம்பித்;திருந்தனர்.
ஒரு வார காலத்திற்கு மேலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்தப்போராட்டம்; நேற்று (07-02-2017) எட்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.கொட்டும் பனியிலும் வெயிலிலும் பச்சிளம் குழந்தைகளையும் வயோதிபர்களையும் இந்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று நல்லாட்சி அரசு எங்களுக்கு நல்ல பதிலைத்தரவிடத்து நாங்கள் இந்தப்;போராட்ட வடிவத்தை மாற்றி எங்களது ஒரிருவரது உயிரை மாய்த்தும் இந்தப்போராட்டத்தை முன்னெடுக்கத்தயாராக உள்ளோம் என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை வடமாகாண போக்குவரத்து அமைச்சர் ப.டெனிஸ்வரன் வடமாகாண சபை சு.பசுபதிப்பிள்ளை பல்கலைக்கழக மாணவர்கள் மீனவர் ஒத்துழைப்பு மையம் மற்றும் பல்வேறு தரப்பினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.





0 Comments