தேசிய சகவாழ்வு மற்றும் கலந்துரையாடல் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட மொழிப்பயிற்சி வகுப்புகளிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த திங்கட்கிழமை (06.02.2016) அன்று மட்டக்களப்பு மண்முனை தெற்குப் பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. நிகழ்வில் பிரதம விருந்தினராக தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளர் கணேசமூர்த்தி கோபிநாத் மற்றும் மட்டக்களப்பு மண்முனை தெற்குப் பிரதேச செயலாளர் கு.குணநாதன் என்போர் கலந்து சிறப்பித்திருந்தனர். 12 நாள் நடைபெற்ற ஆங்கில மொழிப் பயிற்சியினைப்
பூர்த்தி செய்திருந்த 64 இளைஞர், யுவதிகளுக்கு நிறுவனத்தினால் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
இன்றைய காலகட்டத்தில் மொழி மிக முக்கியமானதொன்றாகக் காணப்படுகின்றது. மொழி பல சாதனைகளைப் படைப்பதற்கான ஆயுதமாகத் திகழ்கின்றது. அந்தவகையில் எமது அமைச்சின் கீழ் பலமொழிப் பயிற்சி வகுப்புக்கள் நாடு பூராகவும் நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் எமது மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் ஆங்கிலமற்றும் சிங்கள மொழிப்பயிற்சிவகுப்புக்கள் நடைபெற்றிருக்கின்றது. மொழிப்பயிற்சி வகுப்புகளிற்கான பொறுப்பான அதிகாரியாகநான் விழங்கவதன் காரணமாக இயன்றவரை எமது பிரதேசங்களில் வகுப்புக்களை நாடாத்துவதற்கு என்னால் இயன்ற முயற்சிகளைச் செய்து வருகின்றேன். அந்த வகையில் இன்று காலை பட்டிப்பளையில் சிங்கள மொழிப்பயிற்சியினை நிறைவு செய்த இளைஞர் யுவதிகளிற்கான சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. எம்மால் நிகழ்த்தப்பட்ட இவ் பயிற்சி நெறியில் பெற்ற அறிவினை அடிப்படையாகக் கொண்டு இணைப்பு மொழியாக விழங்கும் ஆங்கில மொழியில் சிறந்த விருத்தியினைப் பெறதொடர்ந்துமுயலுங்கள். திறமையுடன் விடாமுயற்சி இணையும் போதே இமாலய வெற்றியினைப் படைக்க முடிகின்றது. என தனதுஉரையில் கணேசமூர்த்தி கோபிநாத் தெரிவித்திருந்தார்.
0 Comments