மட்டக்களப்பில் நடைபெற்றுவரும் ‘எழுக தமிழ்’ நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்துகொண்டிருக்கும் அதேவேளை, மட்டக்களப்பு எழுச்சிக்கோலம் பூண்டுள்ளது.
கல்லடி பாலம் அருகில் இருந்து இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகி நாவற்குடா விவேகானந்தா விளையாட்டு மைதானத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கும் எழுச்சிப் பேரணியில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்துகொண்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளும் பொருட்டு மக்கள் சாரிசாரியாக வந்தவண்ணம் இருக்கின்றனர்.
இன்னமும் சிறிது நேரத்தின் பின்னர் நாவற்குடா விவேகானந்தா விளையாட்டு மைதானத்த்தில் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்தக்கூட்டத்தில் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்கள் அரசியல்கட்சி தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் உரையாற்றிவருகின்றனர்.



0 Comments