சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற மூன்று பேர் திடீர் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் பெண்ணொருவரும் இரண்டு ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் மூவரும் மலையில் ஏறிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களில் ஒருவர் மொரட்டுவ பகுதியை சேர்ந்தவர் என்பதுடன் மற்றைய இருவரும் காலியை சேர்ந்தவர்கள் எனவும் இவர்களின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments