புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் போது 13ஆவது திருத்தத்திற்கும் அப்பாலான அதிகார பகிர்வை வழங்குவது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை செயற்படுத்தில் ஏற்பட்ட அனுபவங்களை உத்தேச அரசியலமைப்பு தயாரிப்பின் போது பயன்படுத்துவதற்கு ஆராயப்பட்டு வருவதாக அரசியலமைப்பு வழிபடுத்தல் குழுவின் உறுப்பினர் ஒருவர் ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டுள்ளார்.
இதன்மூலம் 13ஆவது திருத்திற்கும் அப்பாலான அதிகார பகிர்வை வழங்குவது தொடர்பான யோசனையை உள்ளடக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை உத்தேச அரசியலமைப்பு தொடர்பாக எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சிகளுக்கிடையே பல்வேறு கருத்துக்கள் நிலவும் நிலையில் , 13ஆவது திருத்திற்கு உட்பட்டதாகவே தீர்வு இருக்குமெனவும் அரசாங்கம் ஒருபோதும் 13க்கு அப்பால் செல்லாது எனவும் சபை முதல்வரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments