வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு செல்லும் இலங்கையரின் அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள யோசனைக்கு அமையவே இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதன்படி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடுகளுக்கு செல்லும் பணியாளர்களின் அடிப்படை சம்பளத்தை பயிற்சி பெற்ற பணியாளர்களுக்கு 450 டொலர் என்ற ரீதியிலும் மற்றும் பயிற்றப்படாத பணியாளர்களுக்கு 350 டொலர் என்ற அடிப்படையிலும் அடிப்படை சம்பளம் வழங்கப்படவுள்ளது.
0 Comments