களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தொகுதி 01.02.2017 இன்று ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன் தெரிவித்தார்.
ஜெய்கா நிறுவனத்தின் 514 மில்லியன் ரூபாய் செலவில் இக்கட்டடத்தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இரத்த வங்கி, நவீன சத்திர சிகிச்சைக் கூடம், சட்ட வைத்திய பிரிவு, கதிர்வீச்சுப் பகுதி, நோயாளர்களின் தங்குமிட வசதி, நிர்வாகத்தொகுதி ஆகியவற்றைக் கொண்டு இக்கட்டடத்தொகுதி அமையப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
0 Comments