மகிந்த ராஜபக்ஷ அணியில் இருக்கும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரை தமது பக்கம் வரச்செய்யும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருவதாக அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்
நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வேறு அணியாக செயற்படுவோரை மீண்டும் தம்முடன் இணைப்பதற்கான வேலைத்திட்டங்களை கட்சி முன்னெடுத்து வருகின்றது. மகிந்த ராஜபக்ஷவுக்கு அருகிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் ஶ்ரீ லங்கா சுநத்திரக் கட்சியினர் மகிந்த ராஜபக்ஷவுடனேயே இருப்பதாகவும் இதனால் அவருடனேயே தாம் இருப்போம் எனவும் கூறுகின்றனர். எவ்வாறாயினும் அவர்களை எம்முடன் இணைத்து ஓரணியில் கொண்டுவர நாம் நடவடிக்கையெடுத்துள்ளோம். என அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments