நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடனான காலநிலை இன்றிருந்து குறைவடையும் எனவும் நாளை முதல் பல பகுதிகளுக்கு மழையற்ற காலநிலை ஏற்படும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் நாட்டின் வட கோளத்தில் காலை மற்றும் இரவு நேரத்தில் குளிருடனான காலநிலை ஒன்றை எதிர்பார்க்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலைமை சில நாட்களுக்கு நீடிக்கும் என திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
எப்படியிருப்பினும் நாளைய தினம் தென் மாகாணத்தின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் எனவும், மேல் மாகாணம், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் பனியுடனான காலநிலை ஒன்றை எதிர்பார்க்க முடியும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கப்படுகின்றது.
திணைக்களம் இன்று மதியம் 12 மணியளவில் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
0 Comments