ஆரையம்பதி வைத்தியசாலையின் குறைகளை நிவர்த்தி செய்து தருவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பிரதேசமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆரையம்பதி வைத்தியசாலையானது மட்டக்களப்பு பிரதான வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்ட காலத்தை சேர்ந்தது.
இவ்வைத்தியசாலையினை உரிய வகையில் புனரமைத்துத் தருமாறு பிரதேச மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
மேலும் இவ்வைத்தியசாலைக்கு வருகை தந்த சுகாதார அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நேரில்பார்த்து அதன் நிலைமையை கருத்தில் கொண்டு வைத்தியசாலையை தரம் உயர்த்தி கட்டடவசதிகளையும் ஏற்படுத்தி தருவதாக வாக்குறுதியளித்து சென்றுள்ளனர்.
ஆனால் இன்று வரை குறித்த வைத்தியசாலை பாரிய குறைபாடுகள் மத்தியில் இயங்கி வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
தற்போது இவ் வைத்தியசாலையில் நோயாளிகள் அதிகம் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
மேலும் வைத்தியசாலையின் ஆண், பெண் விடுதிகளும் இடிந்து விழும் தருவாயில் காணப்படுகின்றது.
பிரேத அறை கட்டப்பட்டு 5 வருடம் ஆகியுள்ளது. ஆனால் முறையான குளிரூட்டி வசதி இல்லாமல் மூடிக்கிடக்கின்றது.
வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளால் சிகிச்சைப் பெற வரும் நோயாளர்கள் அதிகம் பாதிப்பை எதிர்நோக்குகின்றனர்.
ஆகவே வைத்தியசாலையினை விரைவில் புனரமைப்பதற்கு ஜனாதிபதி விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 Comments