Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இராணுவ பாதுகாப்புடன் கஞ்சா செய்கையை ஆரம்பிக்க நடவடிக்கையெடுக்கப்படும் : சுகாதார அமைச்சர்

ஆயூர்வேதம் உள்ளிட்ட உள்ளுர் மருத்துவத்தை வளர்ப்பதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளதாகவும் இதன்படி இந்த மருத்துவத்துறைக்கு தேவையான கஞ்சா செடிகளை சட்ட அங்கீகாரத்துடன் வளர்ப்பதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் சுகாதார மற்றும் உள்நாட்டு மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற திய ஆயுர்வேத மருந்து பொருட்களின் அறிமுக நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இப்போது உலக நாடுகள் எங்கும் மேற்கத்தேய மருத்துவமே காணப்படுகின்றது. ஆனால் மேற்கத்தேய மருத்துவத்தால் தீர்க்க முடியாத பல நோய்கள் இருக்கின்றன. எவ்வாறாயினும் அவ்வாறான நோய்களையே இந்த மூலிகை மருத்துவம் குணமாக்கும் வல்லமை கொண்டது.
இந்நிலையில் இலங்கையில் ஆயுர்வேத மருத்துவத்தை பாதுகாக்க வேண்டும். அதற்காக நாம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். ஆயுர்வேததத்திற்கு தேவையான மூலிகை செடிகளை வளர்க்க வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். ஒரு கட்டத்தில் வெளிநாட்டிலிருந்து அபினை நான் மிகுந்த பாதுகாப்புடன் கொண்டு வந்து இங்குள்ள ஆயுர்வேத மருத்துவர்களிடம் கையளித்து தேவையான மருத்துங்களை தயாரிக்குமாறு கோரினேன். இதேபோன்று கஞ்சாவும் மருத்துவ பொருளே அதனை புகைப்பதற்காக பயன்படுத்தாது மருந்துக்காக பயன்படுத்தினால் எந்தப் பிரச்சினையும் கிடையாது. இதன்படி மருத்துவத்திற்கு தேவையான கஞ்சா செடிகளை இராணுவ பாதுகாப்புடன் வளர்க்க நடவடிக்கையெடுக்கவுள்ளேன். என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments