வீதி ஒழுங்குவிதிகளை மீறுவோர் மீதான தண்டபணத்தை 25,000 ரூபா வரை அதிகரிக்கும் தீர்மானத்தின்படி திருத்தியமைக்கப்பட்ட தண்டப்பண பத்திரம் எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது தண்டப்பண பத்திரம் தயாரிக்கும் பணிகள் முடிவடைந்துள்ளதுடன் அதனை எதிர்வரும் நாட்களில் பஸ் சங்கம் உள்ளிட்ட போக்குவரத்து சங்கங்களிடம் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமை , மதுபோதையில் வாகனம் செலுத்தல் உள்ளிட்ட 7 பிரதான விடயங்களை உள்ளடக்கியதாக இந்த தண்டப்பண அறவீடு நடக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments