Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மூதூர் விபத்தில் ஒருவர் பலி

திருகோணமலை-மட்டக்களப்பு வீதி, மூதூர் இறால்குலி பாலத்துக்கு அருகாமையில் இன்று காலை மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் வாகனமும் முச்சக்கரவண்டி ஒன்றும் விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியில் பயணம் மேற்கொண்ட 36 வயதுடைய மூதூரை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவரின் உடல் மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், முச்சக்கரவண்டி சாரதி மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டிப்பர் வாகனத்தின் சாரதியை மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைக்காக தடுத்து வைத்துள்ளனர்.

Post a Comment

0 Comments