பிரித்தானியாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் மத்தியில் பனிப்புயல் தாக்கும் பேராபத்து எழுந்துள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பிரித்தானியாவில் காலநிலை தொடர்ந்து அபாய நிலையில் நீடிப்பதால் எதிர்வரும் 2 வாரங்களில் இது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இந்த காலகட்டங்களில் 70mph அளவுக்கு காற்று வீச்க்கூடும் எனவும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளனர்.
சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த காலகட்டத்தில் இருதயம் தொடர்பான நோய்கள், மார்பு தொடர்பான நோய்கள், உள்ளிட்டவை முதியவர்களை அதிகமாக பாதிப்புக்கு உள்ளாக்குவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, கடந்த ஜனவரி மாதத்தில் கடும் குளிர் காரணமாக ஐரோப்பாவில் சுமார் 1023 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ள நிலையில், மீண்டும் கடும் குளிர் பிரித்தானியாவையும், தலை நகர் லண்டனையும் தாக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments