இலங்கையிலிருந்து பதினொரு கோடி ரூபா பெறுமதியான பணத்தைக் கடத்திச் செல்ல முயன்ற நபருக்கு ஒரு மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 29ம் திகதி இலங்கையிலிருந்து டுபாய் செல்வதற்காக விமான நிலையத்துக்கு வருகை தந்த வர்த்தகர் ஒருவரிடமிருந்து சட்டவிரோதமான முறையில் எடுத்துச் செல்லப்பட இருந்த பதினொரு கோடி ரூபா பெறுமதியான இலங்கை மற்றும் வெளிநாட்டு நாணயத்தாள்கள் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பரந்துபட்ட விசாரணைகளை முன்னெடுத்த சுங்கப் பிரிவினர், கைப்பற்றப்பட்ட பணத்தை அரசாங்கத்தின் கருவூலத்தில் சேர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தனர்.
அத்துடன் கடத்தலில் தொடர்புடைய நபருக்கு நேற்றைய தினம் ஒரு மில்லியன் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது,
0 Comments