தம்புள்ள ஹபரண வீதியில் இன்று அதிகாலை பஸ் ஒன்று வீதியைவிட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கதுருவெலவிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த பஸ் பள்ளத்தில் விழுந்து தலைகீழாக கவிழ்ந்துள்ளது. இதில் காயமடைந்த அனைவரும் தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். -(3)
0 Comments