69வது காந்தி ஜெயந்தி தினம் மட்டக்களப்பில் இன்று திங்கட்கிழமை காலை சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.
காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள காந்தி சிலை அருகில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது மகாத்மா காந்தியின் சிலைக்கு அதிதிகளினால் மலர் மாலை அணிவிக்கப்பட்டு காந்தி ஜெயந்தி தின நிகழ்வுகள் நடைபெற்றன.
காந்தி சேவா சங்கத்தின் தலைவர் எஸ்.செல்வேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை,மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் வி.தவராஜா,பிரதி ஆணையாளர் என்.தனஞ்செயன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
உலகுக்கு அகிம்சையை போதித்த மகானாகவுள்ள மகாத்மா காந்தியின் இந்த ஜெயந்தி தின நிகழ்வில் பாடசாலை மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.





0 Comments