அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் சாய்ந்தமருதில் இடம்பெற்ற வாகன விபத்தில வேனில் வந்த 3 சிறுவர்கள் அந்த இடத்தில் உயிரிழந்ததுடன் ஏனையோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று அதிகாலை 5.15க்கு இந்த விபத்து நடைபெற்றதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றார்கள்.
கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து மதக்கடமைக்கு சென்றுவிட்டு தங்களது ஊரான பாலமுனை நோக்கி சென்று கொண்டிருந்த வேனும் அம்பாறையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்துகொண்டிருந்த இலங்கை போக்குவரத்திற்கு சொந்தமான பேரூந்தும் மோதியதில் வேனில் இருந்தவர்களில் 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ளார்கள் ஏனையவர்கள் தற்போது கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
3 சிறுவர்களில் இரண்டரை வயது, 4 வயது, 8 வயது மதிக்கத்தக்க குழந்தைகளே பலியாகி உள்ளனர்.
ஏனையவர்களில் ஒரு சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.



0 Comments