Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பிரித்தானியாவில் சுற்றித் திரிந்த ஏலியன்ஸ் விண்கலம்:வெளியான பரபரப்பு காட்சி

பிரித்தானியாவில் ஏலியன்ஸ் விண்கலம் சுற்றித் திரிந்த பரபரப்பு வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லிவர்பூலை சேர்ந்த 35 வயதான Lee Piercey என்ற நபரே குறித்த வீடியோவை பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
இவர், Lee Piercey, Urbex Paranormal என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்த அவர் கூறியதாவது, 2016 டிசம்பர் 27ம் திகதி தனது வீட்டின் பூங்காவிலிருந்து குறித்த நிகழ்வை பதிவு செய்தேன்.
சம்பவத்தின் போது வானில் இரண்டு ஒளி தெரிவதை பார்த்தேன். பின்னர், 30 வினாடிகள் அதை பதிவு செய்தேன்.
அந்த ஒளி, ஆளில்லா விமானம், ஹெலிகொப்டர் அல்லது அடையாளம் தெரியாத பறக்கும் பொருளாக இருக்கலாம். எனினும், இந்த மூன்றில் ஒன்றாக தான் அது இருக்கும் என நான் சந்தேகிக்கிறேன்.
ஆனால், ஹெலிகொப்டர் போல் எந்த சத்தமும் வரவில்லை. ஆளில்லா விமானத்தில் இது போன்ற ஒளி தெரிய வாய்ப்பு இல்லை.
எனினும், இது ஏலியன்ஸின் விண்கலமாக இருக்க கூடும். மக்கள் இதை போலி என சொல்லக்கூடும். ஆனால், இது உண்மையாக பதிவு செய்யப்பட்ட காட்சி என தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments