உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சின் தீர்மானத்தின் பிரகாரம் திண்ம கழிவுகளை வகைப்படுத்தி சேகரிக்கும் செயற்திட்டத்தின் 2வது கட்டம் நுவரெலியா பிரதேச சபையினால் இன்று செவ்வாய்க்கிழமை நுவரெலியா பிரதேச சபையின் செயலாளர் யூ.எச்.பத்மா தலைமையில் டயகம, அக்கரப்பத்தனை, மன்றாசி ஆகிய பகுதிகளில் இடம்பெற்றது.
இதன்போது திண்ம கழிவுகளை வகைப்படுத்தி சேகரிக்கும் செயற்திட்டம் குறித்தும் அதனால் சுற்றாடலுக்கும், மக்களுக்கும் ஏற்படவுள்ள அனுகூலங்கள் தொடர்பிலும் பிரதேச மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் தெளிவுப்படுத்தியதோடு, இதற்கு அணைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நுவரெலியா பிரதேச சபையினால் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அத்தோடு பொதுமக்கள் சுற்றாடலுக்கு பாதிக்கும் வகையில் கழிவுகளை கொட்டினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இதன்போது நுவரெலியா பிரதேச சபையின் செயலாளர் கேட்டுக்கொண்டார்.
இந்த செயற்திட்டத்தில் பிரதேச சுகாதார பரிசோதர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் உத்தியோகத்தர்கள், வர்த்தக பிரமுகர்கள், நுவரெலியா பிரதேச சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேற்படி குறித்த பிரதேசங்களில் காணப்பட்ட குப்பை கூலங்களின் ஊடாக சுகாதார சீர்கேடு தொடர்பில் ஊடகங்களின் வாய்லாக நாம் வெளிப்படுத்தியதை தொடர்ந்து நுவரெலியா பிரதேச சபையின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இதன்போது குப்பை கூலங்களை அகற்றி பெக்கோ இயந்திரத்தின் ஆதரத்துடன் மண் போட்டு மூட்டப்பட்டமை குறிப்பிடதக்கது.





0 Comments