நேற்று மாலை 7 மணியளவிலல் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இத்தீயினால் பலசரக்கு கடை, தையல் நிலையம் ஆகிய களஞ்சியசாலை, ஒன்று மூடியிருந்த கடையொன்றும் தீக்கிரையாகியுள்ளன.
இத்தீ மின்சார கோளாறு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
தீயினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் எவ்வளவு என இதுவரை மதிப்பிடபடவில்லை என்றும் இது தொடர்பாக பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்ததுடன் இது தொடர்பாக மேலதிக பரிசோதனைகளையும் மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.-(3)

0 Comments