வீதி விபத்துக்கள் மற்றும் வாகன நெரிசல்களை கட்டுப்படுத்த வேண்டுமாயின் தண்டப்பணத்தை அதிகரிக்க வேண்டியது அவசியமென பொலிஸ் மாஅதிபர் பூஜித்த ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
புத்தாண்டில் தமது கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் உரை நிகழ்த்துகையிலேயே பொலிஸ் மா அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சட்டம் மற்றும் ஒழுங்கு நாட்டில் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதில் வெளியார் தலையீடுகள் இருக்கக்கூடாது. இதற்காகவே பொலிஸ் திணைக்களம் நிறுவப்பட்டுள்ளது. சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தும் பொறுப்பு பொலிஸ் திணைக்களத்துக்குரியது. பொலிஸார் பொதுமக்களுடன் அன்பாக பேசி சரியான வார்த்தை பிரயோகங்களை முன்வைத்து மரியாதையுடன் நடந்து ெகாள்ள வேண்டும். எனினும் சட்டத்தை அமுல்படுத்தும்விடயத்தில் சற்று கண்டிப்பும் அவசியமென்றும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்
0 Comments