(எஸ்.ஸிந்தூ)
பணம் மோசடி செய்த நபருக்கு எதிராக இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார் .
தொழில் பெற்றுத்தருவதாக கூறி ஒரு இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டு கணக்கு முடக்கப்பட்ட வங்கி காசோலையினை வழங்கி ஏமாற்றிய சம்பந்தமாக நளின் குணம் என்பவருக்கு எதிராக 2013 .05.14 ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .
குறித்த வழக்கு தொடர்பான விசாரணை 2017.01.26 ஆம் திகதி வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் மேற்கொண்ட விசாரணை முடிவின் சாட்சியங்கள் நிருபிக்கப்பட்டதன் காரணமாக குற்றவாளிக்கு எதிராக இரண்டு வருட கடுழிய சிறைத்தண்டனையை விதித்து நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா தீர்ப்பளித்துள்ளார்.
0 Comments