காங்கேசன்துறையிலிருந்து நேற்று இரவு கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் ரயிலுக்கு ஏற்படவிருந்த பாரிய விபத்து ரயில் சாரதியின் சாதுர்யத்தால் தவிர்க்கப்பட்டுள்ளது.
தலாவ ரயில் நிலையத்திற்கு ரயில் தண்டவாளத்தில் மற்றுமொறு தண்டவாள துண்டொன்றை குறுக்காக வைத்து அந்த ரயிலை விபத்துக்குள்ளாக்குவதற்கு இனந்தெரியாத குழுவொன்று முயற்சித்துள்ள நிலையில் தண்டவாளத்தில் ஏதோ பிரச்சினை இருப்பதனை உணர்ந்த சாரதி உடனடியாக ரயிலை நிறுத்தி அந்த விபத்தை தடுத்துள்ளார்.
இதேவேளை இதன்போது ரயிலுக்கு சிறியளவிலான சேதமேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ரயிலின் சாரதியும் மற்றும் ரயில் பொறுப்பதிகாரியும் தலாவ பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர்.
0 Comments