எதிர்வரும் நாட்களில் அதிகாலையில் நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் பனி மூட்டமான காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேலும் பல பிரதேசங்களில் வறண்ட வானிலை மற்றும் காலை மற்றும் மாலை வேளைகளில் குளிர்கால வானிலையும் நிலவும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
பல பிரதேசங்களில் மழையுடனான காலநிலையும் நிலவும் எனவும் தென் மாகாணத்தில் இடைக்கிடையில் கடும் காற்று வீசக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
சில பிரதேசங்களில் காலை நேரங்களில் பனிமூட்டமான காலநிலை நிலவுவதுடன், அது விஷேடமாக மேல், சப்பரகமுவ தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் நிலவக்கூடும் என அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த காலப்பகுதியில் சுற்றுலா வரும் பயணிகள் அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
0 Comments