மட்டக்களப்பில் மாபெரும் விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தமிழர் விழாவுக்கு இலங்கை நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் பிரதம அதிதியாக வருகை தந்து சிறப்பிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி 19ஆம் திகதி மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் தமிழர் விழாவில் ஊர்வலமும் பிற தமிழர் பண்பாட்டு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

அன்றை தினம் பிற்பகல் 1.30 மணிக்கு மட்டக்களப்பு கல்முனை வீதியில் கல்லடிப் பாலத்திலிருந்து ஆரம்பமாகும் தமிழர் விழா ஊர்வலத்தில் எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பிரதம அதிதியாக மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டவுடன் தமிழர் பண்பாட்டு நிகழ்வுகள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களும் பொது மக்களும் கலந்து கொள்ள உள்ளதுடன் சகலருக்கும் பகிரங்க அழைப்பு விடுப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments