கல்முனையின் கரையோரப் பகுதிகளில் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.எல்.அலாவுதீன் ஆகியோரின் நேரடி கண்காணிப்பில் இன்று(06) பாரியளவிலான சுத்திகரிப்பு பணிகள் இடம்பெற்றன.
குறித்த பிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில் சாய்ந்தமருது மற்றும் கல்முனைக்குடி பிரதேசங்களில் கடந்த சில தினங்களாக டெங்கு நுளம்புகளை இல்லாதொழிக்கும் பொருட்டு விசேட வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் போது வாடிகள், மீனவர் தங்குமிடங்கள், சுற்றுப் புறச் சூழல்கள், படகுகள், தோணிகள் என்பன தீவிரமாக பரிசோதிக்கப்பட்டதுடன் அவற்றை சுத்தப்படுத்தும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.
0 Comments