அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் விதமாக ஆட்களை ஒன்று திரட்டிய குற்றச்சாட்டுக்காக நீதி மன்றத்தில் பிரசன்னமாகுமாறு மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் மட்டக்களப்பு பிக்குவுக்கு அழைப்பாணை அனுப்பி வைத்துள்ளது.
கடந்த சனிக்கிழமை (03.12.2016) மட்டக்களப்பில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையில் மட்டக்களப்பு மங்களராம விஹாராதிபதி தனது தொண்டர்களைத் திரட்டிக் கொண்டு வந்து பொலிஸ் தடைகளுக்கு மேல் ஏறி அமர்ந்து கொண்டு கூச்சலிட்டதுடன் ஆரவாரமும் செய்திருந்தார்.
இதன் பின்னர் பொலிஸார் மட்டக்களப்பு மங்களராம விஹாராதிபதிக்கெதிராக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக ஆட்களைத் திரட்டினார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்துமட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தின் கவனத்திற்கு இன்று கொண்டு வந்திருந்தனர்.
0 Comments