சாய்ந்தமருது பிரதான வீதியில் இன்று (09) மோட்டார் சைக்களில் மோதுண்ட சிறுமி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உணவகம் ஒன்றில் இருந்து வெளியில் வந்து வீதியினை கடக்க முற்பட்டவேளை வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் குறித்த சிறுமி மீது மோதியுள்ளது.
விபத்துக்குள்ளான சிறுமி உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள, அதேவேளை சிறுமிக்கு தகுந்த சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது,
இதேவேளை, விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments