வவுனியாவில் கடந்த ஜனவரி தொடக்கம் ஒக்ரோபர் வரையிலான 10 மாத காலப்பகுதியில் 8 இலட்சத்து 41 ஆயிரத்து 507 லீற்றர் கள்ளு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.
போத்தல் கள்ளு விற்பனை தொடர்பில் கேட்ட போதே இவ்வாறு தெரிவித்தனர்.
வவுனியா மாவட்டத்தில் போத்தலில் அடைக்கப்பட்ட கள்ளு விற்பனை யூன், யூலை, ஓகஸ்ட், செப்ரெம்பர் காலப்பகுதிகளில் அதிகளவு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்படி கடந்த ஜனவரி தொடக்கம் செப்ரெம்பர் வரையிலான 9 மாத காலப்பகுதியில் 3 இலட்சத்து 59 ஆயிரத்து 926 லீற்றர் போத்தல் கள்ளு விற்பனையாகியுள்ளது.
இதுதவிர, உடன் கள்ளு கடந்த ஜனவரி தொடக்கம் ஒக்டோபர் வரையிலான 10 மாத காலப்பகுதியில் 4 இலட்சத்து 81 ஆயிரத்து 581 லீற்றர் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன்படி வவுனியா மாவட்டத்தில் இவ்வாண்டின் முதல் 10 மாதங்களில் 8 இலட்சத்து 41 ஆயிரத்து 507 லீற்றர் கள்ளு விற்பனையாகியிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளது.
0 Comments