நாட்டில் உள்ள 3200 பாடசாலைகளில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக போதைப்பொருள் தடுப்புக் குழுக்கள் நிறுவப்படவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிப்பொறுப்பை ஏற்று இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு, எதிர்வரும் ஜனவரி மாதம் 19ஆம் திகதி தொடக்கம் இதற்குரிய திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக செயலணியின் பணிப்பாளர் டொக்டர் சமந்த கித்தலவ ஆராச்சி தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாவதைத் தடுப்பது திட்டத்தின் நோக்கமாகும். போதைப் பொருள் தடுப்புக் குழுக்களை அமைத்து மாணவர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், மாணவ சமூகத்தின் ஊடாக போதைப்பொருளின் தீமை குறித்து சமூகத்திற்கு எடுத்துரைக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். -
0 Comments