Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் சட்ட விரோதமான முறையில் வெட்டப்பட்டு கொண்டுசெல்லப்பட்ட ஒரு தொகை மரங்கள் உழவு இயந்திரத்துடன் மீட்பு

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் சட்ட விரோதமான முறையில் வெட்டப்பட்டு கொண்டுசெல்லப்பட்ட ஒரு தொகை மரங்கள் உழவு இயந்திரத்துடன் மீட்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்ட வீதிச்சோதனை நடவடிக்கையின்போது சனிக்கிழமை இந்த மரங்கள் கைப்பற்றப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் மரங்களை ஏற்றிவந்தவர் பொலிஸாரைக்கண்டதுடன் உழவு இயந்திரத்தினையும் மரங்களையும் கைவிட்டு தப்பிச்சென்றுள்ளதாகவும் அவரை கைதுசெய்யும் பணிகள் நடைபெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வேப்பை மற்றும் நொச்சி மரங்கள் சட்ட விரோதமான முறையில் வெட்டப்பட்டு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் இவை மர ஆலைக்கு கொண்டுசெல்லப்படும்போதே மீட்க்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான நபரை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments