தமிழ் மாணவர்களின் வரலாற்று பாட புத்தகங்களில் தமிழர் தொடர்பான வரலாறு புறக்கணிக்கப்பட்டிருப்பது தொடர்பில் விசேட குழு ஒன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் மூலமாக வெளியிடப்படுகின்ற பாடநூல்களில் (தரம் 6,7,8,9,10) வரலாற்று பாடத்திட்டத்தில் தமிழர் தொடர்பான வரலாறு திட்டமிடப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
அவரின் வேண்டுகோளுக்கு இணங்க விசேட கலந்துரையாடலொன்று கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் தலைமையில் நேற்று முன்தினம் (06 ) கல்வி அமைச்சில் இடம்பெற்றது.இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா,முஜிபுர் ரஹ்மான், கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதாரண, கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் உட்பட பல தமிழ் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.
0 Comments