பிரபல வார இதழ் டைம் 2016ம் ஆண்டின் சிறந்த மனிதராக அமெரிக்கா ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப்பை தெரிவு செய்துள்ளது.
அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையான டைம், ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில், அரசியல்வாதிகள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரில் இருந்து ஒருவரை சிறந்த மனிதராக தேர்வு செய்து அவர்கள் படத்தை அட்டை படத்தில் வெளியிட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதர் இறுதி தேர்வு பட்டியலில் டொனால்டு டிரம்ப், துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன், இங்கிலாந்து சுதந்திர கட்சி தலைவர் நைஜல் பாரேஜ், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட 11 பேர் இருந்தனர்.
இதில் இணையதள வாக்கெடுப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்றிருந்தாலும், டைம் பத்திரிக்கையின் ஆசிரியர் குழு அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப்பை இந்த ஆண்டின் சிறந்த மனிதராக தேர்ந்தெடுத்துள்ளது.
முதலிடம் பிடித்தது பற்றி டிரம்ப் கூறுகையில், நான் சிறுவயதில் இருந்து ’டைம்’ பத்திரிக்கை வாசித்து வருகின்றேன்.
இது மிகப்பெரிய கவுரவம் மற்றும் இதற்கு பல அர்த்தங்கள் உள்ளன, பிரபல நபர் பட்டியலில் முதல் நபராக வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என அவர் கூறியுள்ளார்.
இதேவேளையில் ஹிலாரி கிளிண்டன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments