Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் நான்கு உணவகங்களுக்கு சான்றிதழ்கள் வழங்கல்

களுவாஞ்சிக்குடியில் நான்கு உணவகங்கள் வீ (V) தரச் சான்றிதழ்களை பெற்றுள்ளதாக அப்பிரதேசத்திற்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.ரவிகரன் தெரிவித்துள்ளார்.
குறித்த சான்றிதழ்கள் இரண்டாம் நிலை சுகாதார நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இன்று(09) பெற்று கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட குருக்கள் மடம் முதல் துறைநீலாவணை பிரதேசங்கள் வரையான உணவகங்கள் சுகாதார முறைக்கேற்ப தரப்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
பிரதேசசபையினரும், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினரும் இணைந்த இத்தரப்படுத்தலுக்கான பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த தரப்படுத்தலில் எந்தவித உணவகமும் ஏ (A) தரத்தினைப் பெறவில்லை என்பதுடன் வீ தரத்தினைப் பெற்ற நான்கு உணவகங்களைத் தவிர அனைத்து உணவகங்களும் சீ (C) தரத்தினையேபெற்றுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
மேலும் எதிர்காலத்தில் உணவகங்கள் தங்களது சுகாதார தரத்தினைப் உயர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.ரவிகரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments