மட்டக்களப்பு களுதாவளை கடற்கரையில் விமானத்தின் பாகம் என சந்தேகிக்கப்படும் பாரிய பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
நேற்று காலை 5 மணி அளவில் இப் பாரிய பொருள் கரை ஒதுங்கியதாகவும் இதனை அவதானித்த பின்னர் களுவாஞ்சிகுடி பொலிசாருக்கு அறிவித்ததாகவும் களுதாவளை மீனவர் சங்கத் தலைவர் எஸ்.இராமலிங்கம் தெரிவித்தார்.
பொலிசார்,கடற்படையினர்,இரணுவத்தினர் பொது மக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு பல மணித்தியாலங்களின் பின்னர் கரைசேர்துள்ளனர்.
அண்ணளவாக பத்து அடிக்குமேல் நீளம் கொண்டதாகவும் மிகவும் பாரங்கூடிய பொருளாகவும் காணப்பட்டது. மீட்பு பணியில் ஈடுபடும் போது கடற்படையினர் கடலில் இயந்திர படகுளில் பாதுகாப்பில் ஈடுபட்டமையை காணக் கூடியதாக இருந்தது.
கடற்படை அதிகாரி ஒருவரிடம் வினாவிய போது குறித்த பொருளை மீட்ட பின்னர் தாங்கள் பொறுப் பேற்று எடுத்து செல்ல இருப்பதாகவும் இதனை என்ன பொருள் என சரியாக தற்போதைக்கு அடையாளங் காண முடியாதுள்ளதாகவும் தெரிவித்தார்.
இப் பொருள் எங்கு கொண்டு செல்லப்பட இருக்கின்றது என வினாவியபோது பகுப்பாய்வுக்காக திருகோணமலை அல்லது கொழும்புக்கு கொண்டு செல்லப்படலாம் எனவும் எதனையும் சரியாககூற முடியாது எனவும் தெரிவித்தார்.

?????????????

0 Comments