தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையில் 73 வயதான மூதாட்டி ஒருவர் பங்குபற்றியமை பதிவாகியுள்ளது.
மாத்தறை நடுகல பிரதேசத்தைச் சேர்ந்தவரான என்.எஸ். கல்யாணி என்பவரே இவ்வாறு பரீட்சைக்கு தோற்றியுள்ளார். கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவரான இவர், தகவல் தொழில்நுட்ப பாட பரீட்சைக்கு தோற்றியுள்ளார் என்பது மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள விடயமாகும்.
தான் வேலை வாய்ப்பை எதிர்பார்த்து குறித்த பரீட்சைக்கு தோற்றவில்லை என தெரிவிக்கும் இவர், சமூகத்தின் தற்போதைய நிலை, அதன் வளர்ச்சியோடு தானும் இணைந்திருக்க வேண்டும் எனும் நோக்கிலேயே குறித்த பரீட்சையில் தோற்றியதாக தன்னம்பிக்கையோடு தெரிவித்தார்.
அத்துடன் நின்று விடப்போவதில்லை என தெரிவிக்கும் வகையில், அடுத்த வருடம் இலத்திரனியல் மற்றும் ஹிந்தி ஆகிய பரீட்சைகளிலும் பங்குபற்றவுள்ளதாக தெரிவித்தார்.
0 Comments