2017 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 110 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக இடம்பெற்ற வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தை தொடர்ந்து மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு (இறுதி வாக்கெடுப்பு) நேற்று பாராளுமன்றத்தில் நடத்தப்பட்டது.
இதன்போது வரவுசெலவுத்திட்டத்துக்கு ஆதரவாக 165 வாக்குகளும் எதிராக 55 வாக்குகளும் வழங்கப்பட்டன. இதேவேளை வாக்கெடுப்பின. போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட 4 பாராளுமன்ற உறுப்பினர்கள் சமுகமளி த்திருக்கவில்லை.
குறித்த வாக்கெடுப்புக்கு நாமல் ராஜபக்ஷ, மக்கள் விடுதலை முன்னணியினர் மற்றும் கூட்டு எதிர்கட்சியின் உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வாக்கெடுப்பின் பின்னர் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பாராளுமன்ற இலத்திரணியல்வாக்களிப்பு முறையும் பரீட்சிக்கப்படமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவற்றின் உறுப்பினர் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
0 Comments