Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

25,000 ரூபா நிறுத்தம்! வீதி ஒழுங்கு மீறல் அபராதத்துக்கான புதிய பட்டியல் வருகிறது!

வீதி ஒழுங்குகளை மீறும் வாகன சாரதிகளுக்கான அதேஇடத்தில் அபராதம் விதிப்புக்கான புதியபட்டியல் விநியோகிக்கப்படவுள்ளது.
போக்குவரத்து அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர இந்த உறுதியை அளித்துள்ளதாகமாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ்சேவை சம்மேளன தலைவர் சரத் விஜிதகுமாரதெரிவித்துள்ளார்.
நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் பின்னரே இந்த அறிவித்தல்விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் அகில இலங்கை பஸ் நிறுவன சம்மேளனம், தென்மாகாண பஸ் உரிமையாளர்சம்மேளனம், முச்சக்கர வண்டி சாரதிகள் சம்மேளனம் என்பவற்றின் பிரதிநிதிகள்பங்கேற்றனர்.
இதன்போது அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட 25,000 ரூபா அபராதத் தொகைக்குஆட்சேபனை வெளியிடப்பட்டது.
இந்தநிலையில் சாரதிகளுக்கு இயலுமான வகையில் அபராதத் தொகைகள் அதிகரிக்கப்பட வேண்டும்என்று நேற்றைய சந்திப்பில் இணங்கிக் கொள்ளப்பட்டதாக சரத் விஜிதகுமாரதெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments