Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஜெயலலிதாவுக்கு மக்கள், பிரபலங்கள் இறுதி அஞ்சலி: கண்ணீரில் தமிழகம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ராஜாஜி அரங்கில் பொதுமக்கள், அதிமுக தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 75 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் திங்கட்கிழமை இரவு 11.30 மணிக்கு பிரிந்தது.
அவருக்கு வயது 68. முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் பிரிந்த தகவலை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் நள்ளிரவில் அதிகாரபூர்வமாக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஜெயலலிதாவின் உடல் போயஸ் கார்டன் இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
வழிநெடுகிளும் அதிமுக தொண்டர்களின் கண்ணீர் வெள்ளத்தில் கொண்டு செல்லப்பட்ட ஜெயலலிதா உடலுக்கு போயஸ் கார்டன் இல்லத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெற்றது.
இதையடுத்து பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவையொட்டி சென்னையில் 30 ஆயிரம் பொலிசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments